விஜய் சேதுபதி நடித்த “மகாராஜா” திரைப்படம் ₹100 கோடி வசூல் சாதனை செய்த நிலையில், தற்போது இந்த படம் சீன மொழியில் டப்பிங் செய்யப்பட்டு வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
அதனை தொடர்ந்து, ஜப்பான் மொழியிலும் இந்த படம் வெளியாகவிருக்கிறது. இதனுடன், விஜய் சேதுபதி தற்போது ‛ஏஸ், ட்ரெயின்’ போன்ற படங்களில் நடித்து வருவதோடு, பிக்பாஸ் சீசன்-8 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில், விஜய் சேதுபதி அளித்த பேட்டியில், ‛‛என் மகனும் மகளிடமும் நான் ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. அவர்களிடம் நான் குழந்தை போல் நடந்து கொள்கிறேன். எந்த விஷயமாக இருந்தாலும் அவர்களின் கருத்துக்களை கேட்டு, அவற்றிற்கு முன்னுரிமை கொடுப்பேன். முக்கியமாக, படப்பிடிப்பு தளத்தில் நடக்கும் சம்பவங்களையும் குடும்பத்தாருடன் பகிர்வேன்,” என்று கூறினார். மேலும், ‛‛என் மகனின் பெயரைச் சொல்லி அழைப்பதில்லை. சூர்யாவை ‘அப்பா’ என்றும், ஸ்ரீஜாவை ‘அம்மா’ என்றும் தான் அழைக்கிறேன்,” என்று கூறியுள்ளார்.