மார்ச் மாதத்தில் நிதின் மற்றும் ஸ்ரீலீலா நடித்த ‘ராபின்ஹுட்’ என்ற திரைப்படம் வெளியானது. இதில் நடிகை கெட்டிகா ஷர்மா நடனமாடிய ‘அதிதா சர்ப்ரைஸ்’ என்ற பாடல் வெளியானதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக அவர் நடனமாடிய சில நடன அசைவுகள் பலராலும் விமர்சிக்கப்பட்டன.

இந்த சர்ச்சை குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு நடிகை கெட்டிகா பதிலளிக்கையில், “நடிகையாக நீங்கள் பலவிதமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும். அதேபோல் ஒரு கவர்ச்சி பாடலிலும் நடனமாடுவதில் தவறில்லை. இது ஒரு திரைப்படத்தின் ஒரு பகுதியாகவே இருக்கிறது.
ஒரு படம் மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப இருந்தால், அவர்கள் அதை ரசிக்கத் தான் செய்வார்கள். இல்லை என்றால் விமர்சிப்பார்கள். அந்த பாடலில் நடனமாடும்போது இதுபோன்ற விமர்சனங்கள் வரும் என நான் எதிர்பார்க்கவில்லை. ஆனால் இந்த சர்ச்சைக்குப் பிறகு, ஒரு பாடம் கற்றுக்கொண்டேன். இனி நிச்சயமாக நான் கவனமாக இருப்பேன்” என்று தெரிவித்தார்.