பிரபல நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி திரைப்படங்களில் நடிகையாக அறிமுகமாகி, இன்று சினிமா, தொலைக்காட்சி தொடர்கள், வெப் தொடர்கள் ஆகிய அனைத்திலும் தனது திறமையால் முத்திரை பதித்துக் கொண்டுள்ளார். அவருக்கு மிகப்பெரிய புகழை பெற்றுத் தந்த தொடர் பாக்கியலட்சுமி, இது தமிழக மக்களிடையே அவருக்கு பெரும் வரவேற்பைப் பெற்றுத்தந்தது. அதே நேரத்தில், இளைஞர்களிடம் அதிக பிரபலமடைந்ததற்கான முக்கிய காரணம் வேலைன்னா வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் அவர் நடித்த புஷ்பா கதாபாத்திரம் தான்.

இந்நிலையில், அண்மையில் அவர் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் திரைத்துறையில் அவருடைய பயணம் குறித்து பல கேள்விகள் எழுப்பப்பட்டன. அதில், அவருக்கு மிகப்பெரிய புகழை பெற்றுத்தந்த புஷ்பா கதாபாத்திரம் குறித்து அவரிடம் விசாரணை செய்யப்பட்டது.
இதற்குப் பதிலளித்த ரேஷ்மா, “முதலில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தேன். ஆனால், இயக்குநர் இதில் எந்த விதமான கிளாமர் காட்சிகளும் இருக்காது, நீங்கள் நடிக்கலாம் என்று கூறினார். அதனால் தான் இந்த கதாபாத்திரத்தில் நடித்தேன். ஆனால், இது இவ்வளவு பெரிய வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கவில்லை. அத்துடன், இதனால் நான் ஹீரோயின் ஆகிவிடுவேன் என்று நினைத்தேன், ஆனால் அது நடக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.