Friday, January 3, 2025

நடிகையர் திலகம் படத்தில் முதலில் நடிக்க மறுத்தேன்… கீர்த்தி சுரேஷ் OPEN TALK!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் பிரபலமாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், 2013-ம் ஆண்டு பிரியதர்ஷன் இயக்கிய “கீதாஞ்சலி” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். பின்னர், “ரஜினி முருகன்,” “ரெமோ,” “பைரவா,” “தானா சேர்ந்த கூட்டம்,” “மாமன்னன்,” “சைரா” போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகை சாவித்ரியின் வாழ்க்கையை மையமாக கொண்டு உருவான “நடிகையர் திலகம்” திரைப்படத்தில் சாவித்ரி கதாபாத்திரத்தில் நடித்ததற்காக கீர்த்தி தேசிய விருது பெற்றார். இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியிருந்தார். தற்போது, இப்படத்தில் நடிக்க முதலில் அவர் மறுத்திருந்தது குறித்து தகவல் வெளிவந்துள்ளது.

அதன் தொடர்பாக கீர்த்தி கூறியது, நாக் அஸ்வின் கதை சொன்னபோது, அதை நடிக்க முடியாது என்று முதலில் மறுத்துவிட்டேன். தயாரிப்பாளர்கள் ஸ்வப்னா, பிரியங்கா இருவரும் உற்சாகமாக இருந்தாலும், நான் பயந்துவிட்டேன். சாவித்ரி அம்மாவின் வாழ்க்கையை சரியாக தாங்கிச் செய்ய முடியுமா என்ற கேள்வியால் மறுத்தேன். ‘இந்த பொண்ணு எப்படி ஒரு பெரிய வாய்ப்பை நிராகரிக்கிறாள்?’ என்கிற எண்ணம் அவர்களுக்கு இருந்தாலும், நான் எனது திறமையைப் பற்றிய சந்தேகத்தால் அதற்கு இல்லை என்றேன்,” என்று கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News