இயக்குனர் சுதா கொங்காரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், ஸ்ரீலா, அதர்வா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பராசக்தி’. இந்த திரைப்படத்தின் தலைப்பை அறிவித்தபோது, “பராசக்தி” என்ற அதே தலைப்பைத் தான் நடிக்கும் ‘சக்தித் திருமகன்’ திரைப்படத்தின் தெலுங்கு பதிப்பிற்கும் பயன்படுத்தவுள்ளதாக நடிகர் விஜய் ஆண்டனி கூறினார்.

இதைத் தொடர்ந்து, இரு தரப்புகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் முடிவில், சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு ‘பராசக்தி’ என்ற தலைப்பை விட்டுக்கொடுப்பதாக விஜய் ஆண்டனி தெரிவித்தார்.
இதுகுறித்து ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது, சினிமா துறையில் மூன்று சங்கங்கள் உள்ளன. நான் ‘பராசக்தி’ என்ற தலைப்பை ஒரு சங்கத்தில் பதிவு செய்திருந்தேன். ஆனால், அதை தெரியாமலேயே அவர்கள் மற்றொரு சங்கத்தில் பதிவு செய்துவிட்டனர். இருந்தாலும், எங்கள் கதைக்கு அந்த தலைப்பே சரியாக அமையும் என இயக்குநர் சுதா கேட்டுக் கொண்டதால், நட்புக்காக அன்புக்காக அந்த தலைப்பை விட்டுக் கொடுத்து விட்டேன். இப்போது நான் நடிக்கும் தெலுங்கு திரைப்படத்திற்காக வேறு ஒரு புதிய தலைப்பை யோசித்து வருகிறேன்,” என்று கூறியுள்ளார்.