நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“நேற்றிரவு, நேற்றைய நண்பரும் இன்றைய த.வெ.க. தலைவருமான விஜய் அவர்களுடன் நடந்த ஆழமான உரையாடல், பஜ்ஜியுடன் தேநீர் ருசித்தல், வெளியில் கசியாத ரகசியமான அரசியல் திட்டங்களை அமைத்தல் – இப்படியாக விடிய விடிய நீண்ட சுவாரஸ்யமான நிகழ்வுகள் நடந்தன. சரி, இதை ஒரு பதிவாக வைத்துக் கொள்ள, ஒரு selfie எடுத்துக்கொள்ளலாமே எனப் பார்த்தால்…”
அது கனவு! ஏன் இப்படியான பகல் கனவு இரவில் வருகிறது?
ஆனால், சத்தியமாக அந்த கனவு வந்தது.
“கனவுகள் நம் நினைவுகளின் நகல்கள்” எனக் கூறுவார்கள். சமீப நாட்களாக என்மீது அவர் பற்றிய கேள்விகள், அதனுடன் தொடர்புடைய என் மந்தமான பதில்கள், பல சிந்தனைகள் – இவையெல்லாம் இதற்குக் காரணமாக இருக்கலாம்.இவ்வாறு, பார்த்திபன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.