மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமாரை நினைவுகூரும் விதமாக சென்னை நகரில் ‘ஆனந்த யாழை’ என்ற தலைப்பில் ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அந்நிகழ்வின் போது, தான் எழுதிய பாடல்களுக்காக பெற்ற பணத்தை நா. முத்துக்குமாரின் குடும்பத்திற்கு வழங்கியதாக அவர் தெரிவித்தார்.

சிவகார்த்திகேயன் அந்நிகழ்ச்சியில் பேசிய போது, முதன்முறையாக இயக்குநர் நெல்சன் என்னை அழைத்து ஒரு பாடல் எழுத சொல்லும்போது, சும்மா ஜாலியாகவே எழுதினேன். அதில் பெரிதாக அர்த்தம் எதுவும் இல்லை. ஆனாலும், அந்த வேலையை ஒரு அர்த்தமுள்ள முயற்சியாக மாற்ற வேண்டும் என்று எனக்குள் தோன்றியது. எனவே, ‘எனக்கு சம்பளமாக ஏதேனும் கொடுங்கள், அதை நா. முத்துக்குமார் சாருக்கு கொடுக்க வேண்டும்’ என்று நான் கூறினேன். இது உதவி அல்ல, இது என் கடமை.
உங்களைப் போல் பாடல்களை எழுத இன்னொருவர் பிறப்பாரா என்று தெரியவில்லை. நானும் சில நேரங்களில் பாடல் எழுதுகிறேன். ஆனால், ஒவ்வொரு முறையும் பாடல் எழுதுவதற்கு முன்னர், உங்கள் இரு பாடல்களையாவது கேட்டுவிட்டு எழுதுவேன் என்றுள்ளார்.