மலையாள சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள மோகன்லால், முதல் முறையாக ‘பரோஸ்’ என்ற திரைப்படத்தை மிகப் பெரிய செலவில் இயக்கி, அதில் நடித்து இருக்கிறார். 3டி வடிவத்தில் வெளியான இந்த படம், வசூல் ரீதியாக தோல்வியை எதிர்கொண்டு வருகிறது.
இந்த சூழலில், பரோஸ் படம் வெளியான பிறகு மோகன்லால் அளித்த பேட்டியில், “பரோஸ் படம் பாக்ஸ் ஆபிஸ் தோல்வியை நோக்கி நகர்கிறது. கடந்த 47 ஆண்டுகளாக மக்கள் எனக்கு அளித்து வரும் அன்புக்கும் மரியாதைக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக நான் அவர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன்.
பரோஸ் என்பது நான் அவர்களுக்கு அளித்த ஒரு பரிசு. இதை நான் பணத்துக்காக செய்யவில்லை. இப்படத்தை குடும்பத்துடன், குறிப்பாக குழந்தைகளுடன் பார்த்து மகிழ்வதற்காக உருவாக்கினேன்,” என்று தெரிவித்துள்ளார்.