Touring Talkies
100% Cinema

Monday, March 10, 2025

Touring Talkies

அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்கிறேன் – இயக்குனர் மிஷ்கின்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் மிஷ்கின், பட விழாக்களில் கலந்து கொண்டால் அவர் பேச்சுக்கள் அடிக்கடி சர்ச்சையாகி விடுகின்றன. அவரது கருத்துகள் நேர்மையானதாகவும், ஒருமையில் பேசப்படுவதாலும், சில சமயங்களில் ஆபாசமாக இருந்ததாலும் இது நடக்கிறது. ‛பாட்டல் ராதா’ ட்ரைலர் வெளியீட்டு விழாவில், மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பேசப்பட்டாலும், மிஷ்கின் மதுப்பழக்கத்தை கொண்டாடுவதாகக் கூறி தன் பேச்சை தொடங்கினார். பேச்சின் இடையே, தகாத வார்த்தைகள் மற்றும் பிறரைக் காயப்படுத்தும் வகையில் பேசினார். இதனால், அந்த நிகழ்வில் கலந்து கொண்ட பலர் சங்கடம் அடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து, ‛பேட் கேர்ள்’ டீசர் வெளியீட்டு விழாவில் மிஷ்கின் பேசுகையில், “என்னுடைய பேச்சுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். கவிஞர் தாமரை, நான் வெற்றியை பயன்படுத்தி அப்படி பேசினேன் என்று கூறியிருந்தார். நான் சினிமாவில் 18 ஆண்டுகளாக போராடிக்கொண்டிருக்கிறேன், அதை அவர் புரிந்துகொள்ள வேண்டும். நான் அவரிடம் கருத்துக்கு மன்னிப்பு கேட்கிறேன்.

அதோடு, இயக்குநர் லெனின், நடிகர் அருள்தாஸ், லஷ்மி ராமகிருஷ்ணன், தயாரிப்பாளர் தாணு ஆகியோரிடமும் மன்னிப்பு கேட்கிறேன். நான் நகைச்சுவைக்காகவே அப்படி பேசினேன். ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற பெயரை கேள்வி கேட்டோம் என்றால், ‘சூப்பர் டீலக்ஸ்’ டிரைலரின் முடிவில் இருந்த கெட்ட வார்த்தையை கேட்டோமா? நான் பேசியது ஆபாசமாக இருக்கிறது என கூறி கடந்த மூன்று நாட்களாக பல அழைப்புகள் வந்தன. ஆனால், மன்னிப்புக் கேட்க நான் தயங்க மாட்டேன். உதிரிப்பூக்கள் கிளைமேக்ஸ் காட்சியில் ஒரு கதாபாத்திரம் கூறும் போல, நான் உங்களை எல்லாரையும் கெட்டவனாக மாற்றிவிட்டேன். நண்பர்களே, நான் உங்களை கடவுளாக நினைத்து மன்னிப்புக் கேட்கிறேன்” என்றார்.

- Advertisement -

Read more

Local News