‘போர் தொழில்’ திரைப்படத்தை இயக்கிய விக்னேஷ் ராஜா, தற்போது நடிகர் தனுஷின் 54வது படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தின் பூஜை நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இதில் நாயகியாக மமிதா பைஜூ நடிக்கிறார். முக்கிய வேடங்களில் ‘ப்ளூ ஸ்டார்’ படத்தில் நடித்த பாண்டியராஜனின் மகனும், இயக்குநருமான பிரித்வி பாண்டியராஜன் நடிக்கிறார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருத்து பகிர்ந்திருக்கும் பிரித்வி, “புதிய நாள், புதிய வாய்ப்பு. தனுஷ் அவர்களின் D54 படத்தில் நடிக்க நான் ஆவலாக காத்திருக்கிறேன்.
இதுபோன்ற மகிழ்ச்சியான செய்தியை சொல்ல வார்த்தைகளே இல்லை. எனக்கு இந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் விக்னேஷ் ராஜாவிற்கும், தயாரிப்பாளராக இருக்கும் வேல்ஸ் இன்டர்நேஷனலிற்கும் என் நன்றிகள்” என பதிவிட்டுள்ளார்.