இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர் சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் ‘ரெட்ரோ’. இதில் அவரது ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். மேலும் நாசர், ஜெயராம், ஜோஜு ஜார்ஜ், ஸ்வாசிகா, கருணாகரன் உள்ளிட்டோரும் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘ரெட்ரோ’ படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று (18.04.2025) சென்னையில் நடந்தது. இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் சூர்யா, “அன்புள்ள ரசிகர்களுக்கு என் வணக்கம். நீங்கள் அளிக்கும் அன்பால் தான் இன்று நான் இருக்கிறேன்” என்று உரையாற்றத் தொடங்கினார். மேலும், “ருக்மினியாக வந்ததற்கு பூஜாவிற்கு நன்றி.

‘ரெட்ரோ’ என்பது நாம் கடந்த காலத்தை நினைவுகூரும் ஒரு உணர்வு. அந்த காலத்தை நான் மறக்க முடியாது.ஷூட்டிங்கில் ஜெயராம் சார் முதற்தர மாணவர் மாதிரி முயற்சி எடுத்தார். இந்தப் படத்தில் விது மிகுந்த உழைப்பு செய்தார். நான்கு மாதங்கள் வேலை செய்தாலும், ஒவ்வொருவரும் முழு அர்ப்பணத்துடன் உழைத்திருக்கிறார்கள். ருக்மினியாக வந்ததற்கு மீண்டும் ஒரு முறை பூஜாவுக்கு நன்றி. ஒரு படம் உருவாவதற்கு, சகோதரத்துவ உணர்வு தேவைப்படுகிறது. 2D மற்றும் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்களின் லோகோ மியூசிக்கே எனக்கு மகிழ்ச்சி கொடுத்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்தப் படத்தின் ஆல்பம் ஹிட் ஆனது என சொல்லலாம். 82 நாட்களில் படப்பிடிப்பு முடிவடைந்தது. ஒவ்வொரு நாளையும் நான் அனுபவித்தேன்.
என்னுடைய கண்ணாடிப்பூவான ஜோவுக்கு நன்றி.
கார்த்திக் சுப்புராஜ் ஐ.டி துறையிலிருந்து சினிமா உலகிற்கு வந்தவர். இது போன்ற ரிஸ்க் எடுத்தது, வாழ்க்கை எவ்வளவு அழகானதென்று உணர்த்துகிறது. நான் இப்போது இயங்கும் முக்கிய காரணம் உங்கள் அன்புதான். இந்த அன்பு இருந்தால் எப்போதும் நானும் சிறப்பாக இருப்பேன். ‘நான் ஒரு நடிகன்’ என்பதையும் தாண்டி, ‘அகரம் அறக்கட்டளை’யை தொடங்கி நடத்துகிறேன். இதற்குப் பின்புலமாக இருப்பது நீங்கள் அளிக்கும் அன்பே. உங்களுக்கும் இதில் பங்கு உண்டு. என் ‘கண்ணாடிப்பூ’ ஜோவுக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்” என்றார்.