சமீபத்தில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன், அஜித் நடிக்கும் “குட் பேட் அக்லி” திரைப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களைப் பகிர்ந்தார். அப்போது, தனது பதிவில், “எனது வாழ்நாளில் இப்படிப்பட்ட வாய்ப்பை எனக்கு வழங்கிய அஜித் சாருக்கு நன்றி. கனவு நிறைவேறியது. லவ் யூ சோ மச் சார். படப்பிடிப்பு இனிமையாக முடிந்தது எனக் கூறியிருந்தார்.
தற்போது, இந்த படத்தின் டப்பிங் பணிகளும் முடிவடைந்துள்ள நிலையில், அஜித்துடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன், “ஒவ்வொரு ஆண்டும் அஜித் சாரின் குரலை திரையரங்கில் கேட்பதற்காக காத்திருப்பேன். ஆனால் இந்த ஆண்டு, கடவுள் மற்றும் பிரபஞ்சத்தின் கிருபையால், அவருடன் நேரடியாக பணியாற்றும் அனுபவமும், அவரது டப்பிங் குரலை அருகிலேயே கேட்கும் வாய்ப்பும் கிடைத்தது. இந்த ஆண்டு “குட் பேட் அக்லி” எனும் அற்புத பயணத்துடன் தொடங்கி முடிவடைந்தது. இந்த நினைவுகளை நான் என்றும் மனதில் பொக்கிஷமாக வைத்துக் கொள்வேன். உங்களுக்கு என்றும் நன்றிக் கடன்பட்டுள்ளேன் என உருக்கமாக தெரிவித்துள்ளார்.
இந்த தகவல்களும், “குட் பேட் அக்லி” படப்பிடிப்பு நிறைவடைந்த செய்தியும் ரசிகர்களிடையே மகிழ்ச்சியையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளன.