Tuesday, January 21, 2025

நானும் ஒரு மனுஷி தானே… இப்படி ஏன் செய்கிறார்கள்? நடிகை சாய் பல்லவி OPEN TALK!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மலையாள சினிமாவில் அறிமுகமாகி, இன்று தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய் பல்லவி, தற்போது ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடித்த தமிழ்த் திரைப்படம் “அமரன்” மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தெலுங்கில் நாகசைதன்யாவுடன் நடித்துள்ள “தண்டேல்” எனும் படம் மீனவர் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது, இது பிப்ரவரி 7ஆம் தேதி திரைக்கு வருகிறது.

சாய் பல்லவி கூறியதாவது, “நான் பொது இடங்களுக்கு சென்றால், பலர் திடீரென அவர்களின் அலைபேசியில் என்னைப் புகைப்படம் எடுப்பார்கள். இது எனக்கு பிடிக்காது. நான் மரமோ, விலை உயர்ந்த கட்டடமோ அல்ல. உயிருள்ள மனிதன். உங்கள் உடன் ஒரு புகைப்படம் எடுக்கலாமா என்று கேட்டு எடுத்தால் நல்லது.

என்னை சுற்றி அதிக கூட்டம் இருந்து, எல்லோரின் பார்வையும் என்மீது இருக்கும்போது, எனக்கு பயமும், கூச்சமும் இருக்கும். சில நேரங்களில் அளவுக்கு மீறிய யோசனைகளில் மூழ்கி விடுவேன். இந்த மனநிலை சரியாக தினமும் தியானம் செய்கிறேன். மேலும் குறைந்த மேக்கப்புடன், இயல்பான முறையில் இருக்க விரும்புகிறேன்” என்றார்.

- Advertisement -

Read more

Local News