தனுஷ் முக்கிய வேடத்தில் நடித்து, சேகர் கம்முலா இயக்கியுள்ள திரைப்படம் ‘குபேரா’. இதில் நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் மற்றும் சுனைனா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாந்த் இசையமைத்துள்ளார்.

படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து தற்போது வெளியீட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வருகிற ஜூன் 20ஆம் தேதி வெளியாகவுள்ளது.
முதலில் இப்படத்தின் நேரம் 3 மணி நேரம் 15 நிமிடங்களாக இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது படக்குழுவினர் படம் முழுவதையும் மீண்டும் பார்வையிட்டு, அதன் நீளத்தை சற்று குறைத்து, 2 மணி நேரம் 50 நிமிடங்களாக திருத்தியுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.