Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

காதல் கொஞ்சும் மெலோடியாக வெளியான அமரன் படத்தின் ஹே மின்னலே பாடல்… ஜி.விக்கு இது 700வது பாடலாம்! #AMARAN

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் படம் ‘அமரன்’. கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன்ஸ் தயாரித்த இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.  

ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில், சிவகார்த்திகேயன் ‘முகுந்தன்’ என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம் இம்மாதம் 31-ஆம் தேதி வெளியிடப்படுகிறது.  

இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடலான ‘ஹே மின்னலே’ பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஜி.வி. பிரகாஷின் 700-வது பாடலாக இது உருவாகியுள்ளது. இந்தப் பாடலை கார்த்திக் நேதா எழுதிய வரிகளில் ஷ்வேதா மோகன் மற்றும் ஹரிச்சரண் இணைந்து பாடியுள்ளனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. 

- Advertisement -

Read more

Local News