நடிகர் பிரித்விராஜ் கடந்த 2019ல் மோகன்லால் நடிப்பில் லூசிபர் என்கிற வெற்றிப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். அந்தப்படம் வெளியாகி ஐந்து வருடம் கழிந்த நிலையில் அதன் இரண்டாம் பாகம் எம்புரான் என்கிற பெயரில் வரும் மார்ச் 27ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் பெரிதும் சிறிதுமாக கிட்டத்தட்ட முக்கியத்துவம் வாய்ந்த 40 கதாபாத்திரங்கள் இடம்பெற்றுள்ளன.அந்த வகையில் இந்த படத்தின் சுரையா பீபி என்கிற வயதான கதாபாத்திரத்தில் நடித்துள்ள பாலிவுட் நடிகை நயன் பட்டின் கதாபாத்திர தோற்றத்தை தற்போது வெளியிட்டுள்ளனர். இவரது கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது என்பதால் கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் அவருக்கு மேக்கப் தினசரி போடப்பட்டதாம்.
