கோட் படத்தைத் தொடர்ந்து வினோத் இயக்கும் தனது 69வது படத்தில் விஜய் தற்போது நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைத்துள்ள நிலையில், படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கப்பட்டது. அங்கு நூற்றுக்கணக்கான நடன கலைஞர்களுடன் விஜய் நடித்துள்ள ஓப்பனிங் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. வினோத் முதற்கட்ட படப்பிடிப்பை பத்து நாட்களில் முடிக்க திட்டமிட்டிருந்தார். ஆனால், அனைத்து காட்சிகளையும் 9 நாட்களுக்குள் படமாக்கிவிட்டு, திரும்பியுள்ளார்.
இந்தப் படத்தில் விஜய் ஒரு காவல்துறை அதிகாரியாக நடித்துவருகிறார். அதாவது, ஒரு பிரச்சினையின் காரணமாக காவல் துறையிலிருந்து வெளியேறும் விஜய், பின்னர் ஒரு முக்கிய வழக்கைத் தீர்க்க மீண்டும் காவல் துறையில் சேர்ந்து அந்த குற்றவாளியைப் பிடிக்கும் வகையில் கதை அமைக்கப்பட்டுள்ளது.
அந்த குற்றவாளி யார்? அவர் எப்படிப்பட்ட குற்றத்தைச் செய்தார்? என்பதில் சஸ்பென்ஸ் இருக்க, அந்தப் பகுதி பெரிய அதிர்ச்சியைக் கொடுக்கும் வகையில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. எனவே, இந்த சஸ்பென்ஸ் உடையாமல், அதனை மையமாகக் கொண்டு சம்பந்தப்பட்ட காட்சிகளை எடுக்க வினோத் திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.