ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், அஜித், திரிஷா மற்றும் பலர் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான படம் ‘குட் பேட் அக்லி’. படத்தை மிகவும் ஸ்டைலிஷாக எடுத்திருந்தார் இயக்குனர் ஆதிக் என அஜித் ரசிகர்கள் பாராட்டினார்கள். படத்தின் வெற்றிக்கு ஜிவி பிரகாஷ் பின்னணி இசையும் ஒரு காரணமாக அமைந்தது. பாடல்களை விட பின்னணி இசை பலமாக அமைந்தது. அப்படத்தின் ‘ஓஎஸ்டி (ஒரிஜனல் சவுண்ட் டிராக்)’ யை விரைவில் வெளியிட உள்ளதாகவும், அதற்கான மிக்சிங் வேலைகள் நடந்து வருவதாகவும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் அறிவித்துள்ளார்.
