அஜித் நடித்துக்கொண்டிருக்கும் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தை இயக்கியுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். இந்த படம் திரையரங்குகளில் வெளியாக இன்னும் 24 நாள்கள் மட்டுமே உள்ளதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக அதிகரித்துள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் வெளியாகியவுடன், தமிழ் திரைப்பட வரலாற்றில் 24 மணி நேரத்திற்குள் அதிக பார்வைகளை பெற்ற டீசராக புதிய சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் “ஓஜி சம்பவம்” பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலை இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷும், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் இணைந்து பாடியுள்ளனர்.இப்பாடல் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.