அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் தொடர்பாக பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் எம். எஸ். பாஸ்கர் கருத்து வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது,அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நடந்தது… இதனால் பாதுகாப்பை கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் உடனே பொதுவாக கூறப்படும் கருத்து, ‘தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது’ என்பதாகவே இருக்கும்.
சிறிது சிந்தித்துப் பார்க்க வேண்டும். இது யாருடைய குற்றம்? கல்வி கற்கச் செல்பவர்களிடம் காதல் வாழ்க்கையை பற்றிய அறிவுரை பெற்றோர் கொடுத்தார்களா?
ஒவ்வொருவருக்கும் ஒரு காவலரை நியமிக்க முடியாது. பெண்ணைப் பெற்ற ஒரு தகப்பனாக கூறுகிறேன், பெண் குழந்தைகள் தற்காப்பு கலையை அவசியமாக கற்றுக்கொள்ள வேண்டும். சிறிய தவறுகளை புறக்கணிக்காமல், சட்டத்தை கடுமையாக்கினாலே குற்றங்கள் குறைய முடியும். அரசுக்கு குறை கூறுவது இதில் நியாயமானதல்ல,” என்றார்.