தனுஷ் நடித்த “அசுரன்” படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான மலையாள நடிகை மஞ்சு வாரியர், அதன் பின்னர் “துணிவு” மற்றும் “வேட்டையன்” படங்களில் நடித்துள்ளார். ஒரு பேட்டியில் அவர், “அசுரன்” படத்தில் நடிக்க தனுஷ் அழைத்ததாகவும், வெற்றிமாறன் கூறிய கதை மிகவும் பிடித்ததால் அந்த படத்தில் நடித்ததாகவும் தெரிவித்தார்.
அதன் பிறகு, அஜித்துடன் “துணிவு” படத்தில் நடிக்க வேண்டுமென்று எச். வினோத் அழைத்தபோது, மிகுந்த ஆர்வத்துடன் நடித்தேன் என்று கூறினார். அந்த படங்களை தொடர்ந்து, ஞானவேல் தனது படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க அழைத்தார். ஏற்கனவே அவர் இயக்கிய “ஜெய்பீம்” படத்தை பார்த்து நான் ஆச்சரியமடைந்தேன். அதனால் உடனடியாக அவரது படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன் என்றார்.
அந்த படத்தில் ரஜினி நடிக்கிறார் என்று அவர் சொன்னபோது மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். தமிழ் சினிமாவில் என் வருகையின் இந்த வேகத்திலேயே ரஜினி, அஜித், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்ததை, நான் மிகவும் பெரிய ஒரு பம்பர் பரிசாகவே கருதுகிறேன் என்று மஞ்சு வாரியர் கூறியுள்ளார்.