Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

‘ஜீனி’ திரைப்படம் என் மனதுக்கு நெருக்கமான படம் – ஜெயம்ரவி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஜெயம் ரவி. ‘ஜெயம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் வித்தியாசமான கதைகளைக் கொண்டு தேர்வு செய்து நடிக்கத் தொடங்கினார். அவரின் நடிப்பில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இதற்குப் பின்பு அவர் ‘பிரதர்’ என்ற திரைப்படத்தில் நடித்துக் முடித்துள்ளார், மேலும் இந்த படம் வரும் தீபாவளி பண்டிகையில் திரைக்கு வர உள்ளது.

தற்போது, வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஐசரி கே. கணேசன் தயாரித்து வரும் ‘ஜீனி’ திரைப்படத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் புவனேஷ் அர்ஜுன் இயக்குகிறார். இதில் கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் வாமிகா கேபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்துக்கு இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் பணியாற்றுகிறார்.

இந்த படம் தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியிடப்படும். சமீபத்தில் நடந்த ஒரு பேட்டியில் ஜெயம் ரவி ‘ஜீனி’ படத்தைப் பற்றி பேசியுள்ளார். அந்த பேட்டியில், “ஜீனி என் மனதிற்கு மிகவும் நெருக்கமான ஒரு படம். இந்த படம் பேண்டஸி மற்றும் உணர்ச்சி கலவையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. காமெடி மற்றும் காதல் ஆகியவை இந்த படத்தில் வித்தியாசமான கோணத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. படத்தின் சுவாரஸ்யமான கதை இதை பான் இந்தியா அளவில் ரசிகர்களை கவரும் படியாக மாற்றும்” என அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

Read more

Local News