இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்த “கேம் சேஞ்சர்” படம் உருவாகியுள்ளது. தமன் இசையமைத்த இந்த படம் ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. முதல் நாள் அதிக வசூல் செய்த இப்படம், அதன் பிற்பாடுகளில் வசூல் குறைவடைந்தது.
இந்த சூழலில், இயக்குனர் சங்கர் ஒரு பேட்டியில், “கேம் சேஞ்சர்” படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறைவானது பெரிய ஏமாற்றமாக இருந்தது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “இந்த படத்திற்காக எடுக்கப்பட்ட காட்சிகள் மிக நீண்டதாக இருந்ததால், அவற்றில் குறைப்பதற்காக 5 மணி நேரத்திற்கும் மேலான காட்சிகளில் பாதியை கத்தரித்து விட்டோம். ஒருவேளை ரசிகர்களுக்கு பிடித்த காட்சிகளை கத்தரித்துவிட்டோமோ, பிடிக்காத காட்சிகளை வைக்க விட்டோமோ என தெரியவில்லை” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.