கடந்த 2023ல் மலையாளத்தில் 96 புகழ் கவுரி கிஷன் நடிப்பில் வெளியான மிஸ் லிட்டில் ராவுத்தர் என்கிற படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததுடன் இந்த படத்திற்கு படத்தொகுப்பாளராகவும் சங்கீத் பிரதாப் பணியாற்றியிருந்தார். இதனை தொடர்ந்து சமீபத்தில் 2023க்கான கேரள அரசு விருதுகள் வழங்கப்பட்ட போது சிறந்த படத்தொகுப்பாளருக்கான விருது மிஸ் லிட்டில் ராவுத்தர் படத்திற்காக சங்கீத் பிரதாப்பிற்கு வழங்கப்பட்டது.இந்த விருதை பெற்றுக் கொண்ட மகிழ்ச்சியுடன் அன்றைய இரவு அந்த விருதை கட்டிப்பிடித்தபடி இவர் படுக்கையில் படுத்து உறங்கும் புகைப்படம் ஒன்று சமீபத்தில் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.
