தென்னிந்தியா சினிமாவில் பிசியாக வலம் வரும் நடிகை சமந்தா, சமீபத்தில் சிக்குன்குனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அதிலிருந்து குணமாகி ஜிம்முக்கு திரும்பியுள்ளார்.
ஜிம்மில் ஒர்க்அவுட் செய்தபோது எடுக்கப்பட்ட வீடியோவை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்டு, “சிக்குன் குனியாவில் இருந்து குணமாகி வருவது ஃபன்” என கேப்ஷன் கொடுத்துள்ளார்.
அவரின் ஒர்க்அவுட் வீடியோவை பார்த்த ரசிகர்கள் கவலையுடன் கருத்து தெரிவித்துள்ளனர். “சிக்குன்குனியாவில் இருந்து குணமானதும் உடம்பில் வலியுடன் ஒர்க்அவுட் செய்வது அவசியமா? யாரும் சொன்னாலே கேட்க மாட்டீர்களா? காய்ச்சல் பிறகு வலியை விட்டுவிட்டு சில காலம் ஓய்வெடுப்பது அவசியம் ஏன் இப்படி செய்கிறீர்கள் என அக்கறையுடன் அறிவுரை கூறி வருகின்றனர்.