விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினியாக இருப்பவர் பிரியங்கா தேஷ்பாண்டே. சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். இந்நிலையில் பிரியங்கா திடீரென திருமணம் செய்துள்ளார். நேற்று 16ம் தேதி இந்த திருமணம் நடந்துள்ளது. தனது திருமண போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் பிரியங்கா. அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

