நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்த ‘தி கேர்ல் பிரண்ட்’ திரைப்படம் சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ராகுல் ரவீந்திரன் இயக்கிய இப்படம், பெண்கள் தங்களை டாக்ஸிக் மனப்பான்மை கொண்ட ஆண்களிடமிருந்து எப்படி காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஒரு சமூகப் பொருள் கொண்ட கதையாக உருவாகியுள்ளது. குறிப்பாக பெண் ரசிகர்கள் இதனை பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

இந்த வெற்றியின் உற்சாகத்தில் இருக்கும் ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் அளித்த பேட்டியில், கொரியன் திரைப்படங்களில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, “lகொரோனா காலகட்டத்தில்தான் கொரியன் படங்கள் பார்க்கும் பழக்கம் எனக்குள் உருவானது. ஒவ்வொரு கொரியன் வெப் சீரிஸும் சுமார் 16 மணி நேரம் ஓடும், மொத்தம் 16 எபிசோடுகளாக இருக்கும். அதனால் அந்தக் கதைகளும், கதாபாத்திரங்களும் எனக்குள் ஒரு தனி ஆர்வத்தை ஏற்படுத்தியது.
அதே சமயம், கொரியன் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் அதில் என்ன கதாபாத்திரம் எனக்குக் கொடுக்கப்படுகிறதோ அதற்கேற்ப தான் நான் ஒப்புக்கொள்வேன். நான் எவ்வளவு செலக்டிவாக கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறேன் என்று உங்களுக்கே தெரியும் இல்லையா? என கூறியுள்ளார் ராஷ்மிகா மந்தனா.

