பிரித்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில், மோகன்லால், டொவினோ தாமஸ், மஞ்சு வாரியர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள மலையாளத் திரைப்படம் ‘எல் 2 எம்புரான்’. இந்தப் படம் இந்த வாரம் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
கடந்த வாரம் முன்பதிவு தொடங்கிய ஒரு மணி நேரத்திலும், ஒரு நாளிலும் இப்படம் புதிய முன்பதிவு சாதனையை ஏற்படுத்தியது. இதுவரை முன்பதிவில் 58 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
மலையாளத் திரையுலகில் இதுவரை இல்லாத அளவுக்கு இப்படத்தின் வசூல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாள் வசூலாகவே இப்படம் 100 கோடி ரூபாய் வசூலிக்கும் என பாக்ஸ் ஆபீஸ் தரப்பினர் கூறுகின்றனர். மலையாள சினிமாவின் பல ஆண்டு வரலாற்றில் இதுபோன்ற வசூல் சாதனை இதுவரை நிகழ்ந்ததில்லை. அப்படி நடந்தால் அது மிகப்பெரிய சாதனையாக கருதப்படும்.