அறிமுக இயக்குநராக விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கும் ‘ஒன்ஸ் மோர்’ திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் மற்றும் அதிதி ஷங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவாளராக பணியாற்றும் இந்த திரைப்படத்திற்கு, படத்தொகுப்பு பணிகளை நாஷ் மேற்கொள்கிறார். ராஜ் கமல் கலை இயக்கத்தை கவனிக்க, நவா ராஜ்குமார் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார்.
மலையாள திரையுலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளரான ஹேஷம் அப்துல் வஹாப், இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இவர் இசையமைக்கும் முதல் தமிழ் திரைப்படம் இதுவாகும். இதற்கு முன்னதாக ஹருதயம், இனி உதரம், சேஷம் மைக்-இல் ஃபாதிமா, குஷி, ஹை நானா போன்ற பல வெற்றிப்படங்களுக்கு இவர் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
படத்தின் சில பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், அடுத்ததாக “எதிரா? புதிரா?” என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை விக்னேஷ் ஸ்ரீகாந்த் எழுதிய வரிகளில், பாடகர் சத்யபிரகாஷ் பாடியுள்ளார். இந்த பாடலின் காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.