கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் ‘டியூட்’. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார். இப்படத்தில் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன், டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த மாதம் 17-ந்தேதி வெளியானது.இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலை குவித்து வருகிறது. ‘டியூட்’ படம் ஓ.டி.டி. தளத்தில் எப்போது வெளியாகும் என காத்திருந்த ரசிகர்களுக்கு தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ‘டியூட்’ படம் வருகிற 14-ந்தேதி வெள்ளிக்கிழமை நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.


