Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

என் பெயர் சொல்லிவரும் யாரிடமும் ஏமாறாதீர்கள்… நடிகர் ராஜ்கிரண் எச்சரிக்கை பதிவு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் ராஜ்கிரண். தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார். இவரது போட்டோவை பயன்படுத்தி சிலர் மோசடிகளில் ஈடுபடுவதாக எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக முகநூல் பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில்,நான் ஒரு நடிகன் என்பதால் என்னை வைத்து திரைப்படம் தயாரிப்பதற்காக என்று சிலரும், என்னை வைத்து திரைப்படம் இயக்குவதற்காக என்று சிலரும், என் அபிமானிகள் என்றும், என் தீவிர ரசிகர்கள் என்று பலரும், என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வதென்பது சாதாரணமாக நடக்கும் விசயம்.இம்மாதிரியான புகைப்படங்களை வைத்துக்கொண்டு என் சொந்தக்காரர்கள் என்றோ எனக்கு மிகவும் வேண்டியவர்கள் என்றோ கூறிக்கொண்டு யார் என்ன காரணத்திற்காக உங்களை அணுகினாலும் அவர்களிடம் மிக கவனமாக இருங்கள்.

கனடா செல்வம் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு நபர் ஒருவர் என்னை வைத்து படம் தயாரிப்பதாக ஏழெட்டு ஆண்டுகள் முன்பு என்னிடம் போட்டோ எடுத்துக் கொண்டார். ஆனால் இதுவரை படம் எடுக்கவில்லை. அந்த நபர் இப்போது தன் பெயரை ஸ்டார்லின் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு தளபதி என்பவரை ஏமாற்ற முயன்றதாக என் காதுக்கு செய்திகள் வருகிறது.

என்னிடம், யார் சிபாரிசும் எடுபடாது. என் விசயங்களில், நான் மட்டுமே முடிவெடுக்கிறேன். என்னுடன் இருக்கும் புகைப்படங்களை வைத்துக்கொண்டு கதைகள் பல சொல்லி யாரும் யாரையும் ஏமாற்றிவிடக்கூடாது என்பதற்காகவே, இந்தப்பதிவு இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News