இயக்குனர் செல்வராகன் தற்போது பல திரைப்படங்களில் நடிகராகவும் செயல்பட்டு வருகிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, அவர் ‛7ஜி ரெயின்போ காலனி’ படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்க உள்ளார். இதில் ரவி கிருஷ்ணா மற்றும் அனஸ்வரா ராஜன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
செல்வராகவன் அடிக்கடி தத்துவார்த்தமான கருத்துகளை பகிர்ந்து, டுவிட்டரில் பதிவு செய்வார். சில சமயங்களில் வீடியோக்களையும் வெளியிடுவார். அண்மையில் வெளியிட்டுள்ள வீடியோவில், நீங்கள் உங்கள் இலட்சியத்தை அடைய முயற்சிப்பது நல்லதே. ஆனால் அதைப் பற்றி அனைவருக்கும் அறிவிப்பதன் அவசியம் இல்லை. நீங்கள் எதைச் செய்யப் போகிறீர்கள் என்பதை யாரிடமும் சொல்லாதீர்கள். ஏனெனில், நீங்கள் சொல்லும் போது அது நிறைவேறுவதற்கான வாய்ப்பு குறையும். பிறர் உங்கள் வெற்றியை பெரிதாக நினைக்க மாட்டார்கள், ஏனெனில் பெரும்பாலானவர்களுக்கு மற்றவர்கள் மகிழ்ச்சியாக இருப்பது முக்கியம் அல்ல.
யாரிடமும் உதவி கோராதீர்கள். மிகச் சிறிய உதவி செய்துவிட்டு, அதன் பற்றி பெரிதுபடுத்தி பேசுபவர்கள் அதிகம். அவர்கள் அதை வாழ்நாள் முழுக்க நினைவு கூறிக் கொண்டே இருப்பார்கள், என அவர் கூறியுள்ளார்.