அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற பத்திரிகை நிறுவனம் ‛தி ஹாலிவுட் ரிப்போர்ட்டர்’ இந்தியாவில் தனது நிறுவனத்தை துவக்கியுள்ளது. அந்த நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற ‛ரவுண்ட் டேபிள்’ நிகழ்ச்சியில் பிரபல இயக்குனர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித், மகேஷ் நாராயணன், கரண் ஜோஹர் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் வெற்றிமாறன் மற்றும் பா.ரஞ்சித் படங்களில் ரஜினிகாந்த் நடித்தது குறித்து பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரஜினிகாந்த் அவர்கள், பா.ரஞ்சித்தை நேரடியாக அழைத்து, எனக்கேற்றவாறு ஒரு படம் எடுக்க வேண்டும் என கூறவில்லை. பா.ரஞ்சித்தின் படமாகவே அது இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன், அவருடன் சேர்ந்து பணியாற்றினார். மேலும், முன்னணி நடிகர்கள் இப்போது புதிய இயக்குனர்களின் திறமையை மதித்து, அவர்களுடன் இணைந்து பணியாற்ற விரும்புவதாக வெற்றிமாறன் குறிப்பிட்டுள்ளார்.
