சிவகார்த்திகேயன் தனது 23-வது படமாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ‘மதராஸி’ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன் மற்றும் டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளராக அனிருத் பணியாற்றுகிறார். சில வாரங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி, மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
தற்போது படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து, இறுதிக்கட்ட வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் அடுத்த வாரம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. அனிருத் மற்றும் சிவகார்த்திகேயன் இணையும் காம்போவில் பல ஆண்டுகளுக்கு பிறகு உருவாகும் பாடல் என்பதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ திரைப்படத்திற்கும் அனிருத் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.