கேஜிஎப் இரண்டாம் பாகத்திற்கு பிறகு நடிகர் யஷ் தற்போது டாக்ஸிக் மற்றும் ராமாயணா எனும் இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் டாக்ஸிக் படத்தை நடிகை கீது மோகன்தாஸ் இயக்குகிறார். இந்த படத்தில் யஷ் உடன் கியாரா அத்வானி, நயன்தாரா, ஹூமா குரேஷி உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படம் கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் உருவாகிறது. வெங்கட் நாராயணாவுடன் இணைந்து, யஷ் இந்த படத்தையும் தயாரித்து வருகிறார்.

இந்த நிலையில், டாக்ஸிக் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்ற பாலிவுட் நடிகை கியாரா அத்வானி தானே கர்ப்பமாக இருக்கும் நிலையில், அவர் தொடர்புடைய காட்சிகளை படமாக்குவதற்காக பெங்களூருக்கு அழைக்க வேண்டாம் என்றும், மாறாக டாக்ஸிக் படப்பிடிப்பை மும்பைக்கு மாற்றுமாறு யஷ் கூறியுள்ளார். இதன் விளைவாக, இந்தப் படத்தில் கியாரா அத்வானி நடிக்கும் பெரும்பாலான காட்சிகள் மும்பையில் தான் படமாக்கப்படுகின்றன.
இந்தப் படத்தை வரவிருக்கும் டிசம்பர் மாதத்தில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். இதேபோன்று ஹிந்தியில் தயாராகும் ராமாயணா திரைப்படத்தில் ராவணனாக நடிக்கும் யஷ், அதிலும் இணை தயாரிப்பாளராக செயல்பட்டு வருகிறார்.