பிரேம்குமார் இயக்கத்தில், கோவிந்த் வசந்தா இசையமைப்பில், கார்த்தி, அரவிந்த்சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா மற்றும் பலர் நடித்துள்ள ‘மெய்யழகன்’ படம் இந்த வாரம் செப்டம்பர் 27ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்கான தணிக்கை முடிந்து அனைவரும் பார்க்கும்படியான ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதே சமயம் படத்தின் நீளம் 2 மணி நேரம் 57 நிமிடம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
