தமிழ் திரையுலகில் அனைவராலும் விரும்பப்படும் நடிகர் சிவகார்த்திகேயன், தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் ‘பராசக்தி’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், இயக்குநர் வெங்கட் பிரபு, அடுத்ததாக சிவகார்த்திகேயனை முன்னணியில் வைத்து புதிய திரைப்படம் ஒன்றை இயக்கத் திட்டமிட்டுள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்த ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (The Greatest of All Time)’ திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், வெங்கட் பிரபு சமீபத்தில் இதுகுறித்து அப்டேட் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: “சிவகார்த்திகேயனுடன் எனது அடுத்த படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளை தற்போது செய்து வருகிறேன். டிசம்பர் அல்லது ஜனவரியில் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம். இது ஒரு வித்தியாசமான படம் ஆகும்,” என தெரிவித்துள்ளார்.