தமிழ் திரைப்பட உலகில் அனைவராலும் கொண்டாடப்படும் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘மதராஸி’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய இந்த படத்தில் ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யுத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அனிருத் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். துப்பாக்கி கலாச்சாரத்தை ஒழிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த படம் தற்போது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இந்நிலையில், இயக்குநர் ஷங்கர் ‘மதராஸி’ படத்தைப் பாராட்டி தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர், *“மதராஸி பல சுவாரஸ்யமான நாடக தருணங்களைக் கொண்ட கவர்ச்சிகரமான வணிக ரீதியான பொழுதுபோக்கு திரைப்படமாக அமைந்துள்ளது. முருகதாஸ், கூறுகளையும் உணர்ச்சிகளையும் சிறப்பாக இணைத்துள்ளார். காதல் பாதையையும் குற்றப்பாதையையும் கலந்துவைத்து அழகாகச் செய்துள்ளார்.
சிவகார்த்திகேயனின் கதாபாத்திரம் சுவாரஸ்யமாகவும் வித்தியாசமாகவும் இருந்தது, அதை அவர் அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார். அதிரடி ஹீரோவாகவும் ரசிகர்களை பிரமிக்க வைத்துள்ளார். அனிருத் வழங்கிய பின்னணி இசை படத்தின் காட்சிகளுக்கு ஊக்கத்தை வழங்குகிறது. வித்யுத் ஜம்வாலை பாராட்டாமல் இருக்க முடியாது; அவர் அற்புதமாக நடித்துள்ளார். இப்படத்தை உருவாக்கிய முழுக் குழுவிற்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.