Tuesday, October 22, 2024

ஜெயம்ரவியின் ஜே‌.ஆர்34 படத்தில் இணைந்த இயக்குனர் ரத்னகுமார்… #JR34

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஜெயம் ரவி நடித்துள்ள ‘பிரதர்’ திரைப்படம் தீபாவளி வெளியீடாக வர உள்ள நிலையில், அவர் ‘ஜீனி’ மற்றும் ‘காதலிக்க நேரமில்லை’ போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதற்குப் பிறகு, ‘டாடா’ படத்தை இயக்கிய கணேஷ் பாபு இயக்கும் தனது 34வது படத்தில் விரைவில் நடிக்கவுள்ளார்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தில் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில், திரைக்கதை ஆசிரியராக இயக்குனர் ரத்னகுமார் இணைந்துள்ளார். இயக்குனர் ரத்னகுமார் ‘மேயாதமான்’, ‘ஆடை’ போன்ற படங்களை இயக்கியவர். லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாஸ்டர்’, ‘விக்ரம்’, ‘லியோ’ மற்றும் ‘கூலி’ ஆகிய படங்களில் டயலாக் மற்றும் ஸ்கிரிப்ட் ரைட்டராக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News