Touring Talkies
100% Cinema

Tuesday, March 11, 2025

Touring Talkies

மெய்யழகன் படத்தை தொடர்ந்து வரலாற்று படத்தை இயக்கும் இயக்குனர் பிரேம்குமார்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் சேதுபதி, திரிஷா இணைந்து நடித்த ’96’ படத்தை இயக்கியதன் மூலம் தனது முதல்படத்திலேயே கவனத்துக்குரிய முத்திரை பதித்தவர் இயக்குனர் பிரேம்குமார். அந்த படத்தில் பிரிந்த காதலின் வலியை சிறப்பாக சித்தரித்து இளைஞர்களை தன் வசப்படுத்தியவர், சில வருட இடைவெளிக்கு பிறகு தற்போது கார்த்தி, அரவிந்த் சாமியை வைத்து ‘மெய்யழகன்’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். சமீபத்தில் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

முதல் படத்திற்கும் இரண்டாம் படத்திற்கும் இடையே ஆறு வருட இடைவெளி எடுத்த இவர், அடுத்த படத்திற்கு எவ்வளவு நேரம் இடைவெளி கொடுப்பார்? அல்லது, அடுத்த படத்தின் கதை எந்த ஜானரில் இருக்கும்? என்கிற கேள்விகள் ரசிகர்களிடையே எழுந்துள்ள நிலையில், தற்போது நடிகர் கார்த்தி இதற்கு பதில் அளித்துள்ளார். ஆம், அடுத்ததாக வரலாற்று படத்தை இயக்க தயாராகி வருகிறார் பிரேம்குமார் என கூறியுள்ளார்.

சமீபத்தில் நடந்த ‘மெய்யழகன்’ பட வெற்றி விழாவில் பேசும்போது நடிகர் கார்த்தி இந்த தகவலை பகிர்ந்தார். அப்போது அவர் கூறியதாவது, “மெய்யழகன் படம் வெளியான பிறகு இது பலரிடையே உரையாடல்களையும் விவாதங்களையும் துவக்கி வைத்துள்ளது. இயக்குனர் பிரேம்குமார் உரையாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் என்பதால் இப்படத்துக்கு அந்த அளவிற்கு வலுவான உறவை உருவாக்கியுள்ளார். அடுத்ததாக அவர் ஒரு வரலாற்று கதையை எடுத்துக் கொண்டு வருகிறார். அதற்கான எழுத்து நடையை முடித்த பிறகு, யார்யா நீ என்று கேட்கும் அளவிற்கு அவருக்கு மரியாதை வந்துவிட்டது. நான் கூட எப்போது அந்த கதையை எழுதி முடிப்பார் என ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என அவர் குறிப்பிட்டார்.

- Advertisement -

Read more

Local News