மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு மற்றும் திரிஷா நடித்த ‘தக் லைப்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ், இந்த படத்தை பாராட்டி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், “பெரும்பாலான காட்சிகளில் ‘ஓ.ஜி. மணி’ சார்ந்த அதிர்வுகளை உணர்ந்தேன், ரசித்தேன். ‘தக் லைப்’ எனக்கு மிகுந்த பிடித்தமான படம். மணிரத்னம் சார் ஒரு வின்டேஜ் கேங்ஸ்டர் டிராமாவை உருவாக்குவதில் மாஸ்டர்.
கமல்ஹாசன் சார் வழக்கம்போல் தனது நடிப்பை ஒரு கலைநயமிக்க வகையில் வழங்கியிருந்தார். சிம்பு என்கிற சிலம்பரசன் டி.ஆர். அவருடைய திறமையை நிரூபித்தார். அனைத்து நடிகர்களும் சிறப்பாக நடித்திருந்தனர். ஏ.ஆர். ரஹ்மானும், ஒளிப்பதிவாளரும் படம் முழுவதும் மாயாஜாலம் செய்திருந்தனர்” என அவர் பாராட்டியுள்ளார்.