தமிழில்”புதிய கீதை”, “கோடம்பாக்கம்”, “ராமன் தேடிய சீதை” ஆகிய படங்களை இயக்கிய கே.பி.ஜெகன், தற்போது “ரோஜா மல்லி கனகாம்பரம்” என்ற புதிய திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.இவர் பல வெற்றி படங்களில் நடித்தும் உள்ளார்.இதில் அவர் இயக்குநராகவும் பணியாற்றுகிறார். இப்படத்தை “மாயாண்டி குடும்பத்தார்” படத்தை தயாரித்த யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.கே.செல்வகுமார் தயாரிக்கிறார்.


இப்படத்திற்கான தொடக்க விழா மற்றும் தலைப்பு டீசர் வெளியீட்டு நிகழ்வு திருச்செந்தூர் அருகே உள்ள சாஸ்தா கோவிலில் நடைபெற்றது. மேலும், இதில் இணையும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இயக்குநர் கே.பி.ஜெகன் கூறியதாவது, “என்னுடைய வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நான் கதாநாயகனாக நடிக்கிறேன். இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் விதமாக உருவாகும் என்றுள்ளார்.