விஜய் சேதுபதி நடித்த ‘பண்ணையாரும் பத்மினியும்’ திரைப்படத்தின் மூலம், 2014ஆம் ஆண்டு இயக்குநராக அறிமுகமானவர் அருண்குமார். அதன் பின்னர், மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து ‘சேதுபதி’ படத்தை இயக்கினார். அந்த படம் வெற்றிப்படமாக அமைந்தது.
தொடர்ந்து, மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்து, ‘சிந்துபாத்’ படத்தை 2019ஆம் ஆண்டு வெளியிட்டார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.சிறிய இடைவெளிக்குப் பிறகு, சித்தார்த் நடித்த ‘சித்தா’ படத்தை இயக்கினார் அருண்குமார். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றது. இது அருண்குமாருக்கு மீண்டும் உற்சாகத்தை அளித்த ஒரு படம் என்றே கூறலாம். தற்போது, விக்ரமுடன் இணைந்து ‘வீர தீர சூரன்’ படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் மார்ச் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இன்று (பிப்ரவரி 2) அருண்குமாரின் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் விக்ரம், விஜய் சேதுபதி, சித்தார்த், எஸ்.ஜே.சூர்யா, விக்னேஷ் சிவன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு வாழ்த்தினர். திருமண நிகழ்வின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி, தற்போது வைரலாகி வருகின்றன.