நடிகர் அஜித் குமார் ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக வெளிநாட்டில் உள்ளார். அங்கு, அவருடைய முக்கிய காட்சிகளை படமாக்கி வருகிறார்கள், மேலும், அவருடைய குடும்பத்தினர் அவருடன் தங்கியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம், அஜித் இந்த படத்தில் மூன்று வித்தியாசமான தோற்றங்களில் நடிப்பது. தற்பொழுது, படத்தின் படப்பிடிப்பு ஸ்பெயினில் மிகுந்த உற்சாகமாக நடைபெற்று வருகிறது. அங்கு, முக்கியமான சண்டைக் காட்சிகளும் பாடல் காட்சிகளும் படமாக்கப்பட உள்ளன.’குட் பேட் அக்லி’ படத்திலுள்ள அஜித்தின் புதிய தோற்றங்கள் சமீபத்தில் சமூக வலைதளங்களில் வெளியாகி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.
இந்நிலையில், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் சமீபத்தில் தனது எக்ஸ் பக்கத்தில் அஜித்தின் இரண்டு புதிய தோற்றங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி விருந்தளித்தார். அதனுடன் மேலும், தற்போது அவர் ஒரு புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார், இதில் அஜித் ஸ்டைலிஷாக கருப்பு நிற தலைமுடியுடன் நடந்து வருகிறார். இத்தனை நாள் சால்ட் அண்ட் பெப்பர் தோற்றத்தில் அஜித்தை பார்த்த ரசிகர்களுக்கு இது ஒரு வித்தியாசமான அனுபவமாக உள்ளது. இந்தப் புகைப்படம் இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.