தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் ராம் சரண். இவர் ‘ஆர் ஆர் ஆர்’ திரைப்படத்திற்குப் பின்னர் சங்கர் இயக்கத்தில் உருவான ‘கேம் சேஞ்சர்’ படத்தில் நடித்தார். இப்படத்தில் கியாரா அத்வானி கதாநாயகியாக நடித்ததுடன், எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்தார்.
இந்தப் படம் சுமார் ரூ.450 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டதாக தயாரிப்பாளர் தில்ராஜு கூறினார். ஆனால், படம் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைப் பெறவில்லை. இதனால், இப்படம் நஷ்டத்தை ஏற்படுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலைமையில், ராம் சரண் தில்ராஜு தயாரிக்கும் அடுத்த படத்தில் தன்னுடைய சம்பளத்தை குறைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நஷ்டத்தை ஈடுசெய்வதற்காக அவர் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.