ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த அமரன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதனைத்தொடர்ந்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அடுத்து யாரை இயக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் சில நாட்களுகாக தனுஷ்-ஐ அவர் இயக்க போவதாகவும் அதுகுறித்த பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல்கள் வெளிவந்தன.
தற்போது அந்த தகவல்கள் உறுதியாகிவிட்டன. தனுஷின் 55வது படத்தை அமரன் படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இன்று பூஜையும் போடப்பட்டு அதன் புகைப்படங்களையும் கோபுரம் சினிமாஸ் வெளியிட்டுள்ளது. இந்த படப்பிடிப்பு பூஜையில் இயக்குனர் வெற்றிமாறனும் கலந்து கொண்டுள்ளார். அடுத்தடுத்த அப்டேட்கள் தொடர்ந்து வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ராஜ்குமார் பெரியசாமி தனது டிவிட்டர் எக்ஸ் பக்கத்தில் அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடக்கின்றன. இந்தியாவிலேயே சிறந்த திறமையான நடிகர் தனுஷை அடுத்து இயக்கப்போவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். தற்போது அமரன் என்ற வெற்றிப்படத்தை கொடுத்த இயக்குனரிடமிருந்து தனுஷ் எப்படிப்பட்ட கதை எந்தளவுக்கு சிறப்பாக வித்தியாசமாக இருக்கும் என ரசிகர்கள் தற்போதே விவாதிக்க ஆரம்பித்துவிட்டனர்.