தனுஷ் நடிப்பில் கடைசியாக “ராயன்” திரைப்படம் வெளியானது. எதிர்பார்ப்போடு வந்த இப்படம் பெரிய வெற்றியை பெறாமல், ரசிகர்களை ஏமாற்றியது. இதையடுத்து, அவர் இயக்கி நடித்த “இட்லி கடை” மற்றும் சேகர் கம்முல்லா இயக்கிய “குபேரா” ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. அதோடு, ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் புதிய படத்திலும் நடிக்கவுள்ளார்.

தற்போது, ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் “தேரே இஷ்க் மேய்ன்” என்ற பாலிவுட் படத்தில் முழுமையாக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். இதில், அவருக்கு ஜோடியாக கீர்த்தி சனோன் நடிக்கிறார். டெல்லியில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நாடு முழுவதும் ஹோலி கொண்டாடப்பட்டதை ஒட்டி, ஆனந்த் எல். ராய், கீர்த்தி சனோன், தனுஷ் ஆகியோர் படப்பிடிப்பில் ஒன்றாக ஹோலி கொண்டாடினர். இதன் புகைப்படத்தை கீர்த்தி சனோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.