Wednesday, January 8, 2025

முக்கியமான காதாபாத்திரத்தில் நடித்தாலும், நடிகைகள் எப்போதும் இரண்டாம் இடத்தில் தள்ளப்படுகின்றனர்… நடிகை நித்யா மேனன் OPEN TALK!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஜெயம் ரவியுடன் நித்யா மேனன் இணைந்து நடித்துள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் நித்யா மேனன், கிருத்திகா உதயநிதி, ஜெயம் ரவி, மிஷ்கின், அனிருத், ஏ.ஆர். ரகுமான் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

அப்போது பேசிய நித்யா மேனன், பெண்களுக்கு சினிமாவில் மட்டுமல்ல, பிற துறைகளிலும் இரண்டாம் நிலை கொடுக்கப்பட்டு வருவதை குறிப்பிட்டார்.

பொதுவாகவே, ஒரு காதல் படம் என்றால் அதை எளிதாக நடிக்கலாம் என நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மையல்ல. ஒரு படத்தில் முக்கியமான காதாபாத்திரத்தில் நடித்தாலும், பெண்களாக நாம் எப்போதும் இரண்டாம் இடத்தில் தள்ளப்படுகிறோம். இது சினிமாவில் மட்டுமல்ல, அனைத்து துறைகளிலும் நிலவுகிறது‌ஆனால் இப்படத்தில் அப்படியில்லை எனக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து உள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது என்றுள்ளார்.

- Advertisement -

Read more

Local News