Touring Talkies
100% Cinema

Monday, November 10, 2025

Touring Talkies

பிப்ரவரியில் தொடங்கும் செலிபிரிட்டி கிரிக்கெட் லீக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கடந்த 2011ஆம் ஆண்டில் இருந்து இந்தியா முழுவதும் உள்ள திரையுலக நட்சத்திரங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி என்பது நட்பு ரீதியாக நடைபெற்று வருகின்றது. இதில் இந்த செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் தொடங்கப்பட்டு முதல் இரண்டு ஆண்டுகள் கோப்பையை சென்னை ரைனோஸ் அணிதான் வென்றது. இதுவரை, மொத்தம் 10 சீசன்கள் நடைபெற்றுள்ளது. இப்படியான நிலையில் இந்த ஆண்டு 11வது சீசன் நடைபெறவுள்ளது.இந்தமுறை செலிபிரிட்டி கிரிக்கெட் லீக் வரும் பிப்ரவரி 8ஆம் தேதி தொடங்கி, மார்ச் 2ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 20 ஓவர் போட்டி என்றாலும், இரண்டு இன்னிங்ஸாக இந்தப் போட்டித் தொடர் நடத்தப்படுகின்றது. இந்த முறை கடந்த ஆண்டில் இருந்து அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அட்டவணைப்படி சென்னை அணிக்குத்தான் முதல் போட்டி. சென்னை அணி தனது முதல் போட்டியில், பெங்கால் டைகர்ஸ் அணியை எதிர்கொள்கின்றது. அதே நாளில், மாலையில் கர்நாடகா அணி தெலுகு அணியை எதிர்கொள்கின்றது.

- Advertisement -

Read more

Local News