ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைப்பில், அஜித், த்ரிஷா மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘குட் பேட் அக்லி’. இப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி அடுத்த வாரம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அஜித் நடித்த முந்தைய படம் ‘விடாமுயற்சி’ பெரிதாக வரவேற்பைப் பெறவில்லை. இதனால், இந்த புதிய படத்தை அஜித் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டு இருக்கின்றனர்.
இப்படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், தனது கடந்த படம் ‘மார்க் ஆண்டனி’ மூலம் மிகப்பெரிய வெற்றியை பெற்றார், மேலும் அந்த படம் 100 கோடி ரூபாய் வரை வசூலித்தது. அதுபோன்று, இந்தப் படத்தையும் அதே அளவுக்கு சுவாரஸ்யமாகவும், வேகமாகவும் இயக்கியிருப்பார் என்று ரசிகர்கள் நம்புகிறார்கள்.
இத்திரைப்படம் தொடர்பாக, படக்குழு தொடர்ந்து சிங்கிள் பாடல்கள் மற்றும் அப்டேட்டுகளை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. இந்த படம் ஒரு முழுமையான கமர்ஷியல் திரைப்படமாக இருக்கும் என தியேட்டர் உரிமையாளர்களும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் இப்படத்தின் முன்பதிவு இன்றுமுதல் தொடங்கவுள்ளது .